Samsung Phone M31

Wednesday, 24 June 2020

e-learning online free classes 1 to 12 school students in tamil


தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் இணையவழிக்கல்வி! மாணவர்கள் வீட்டிலிருந்து படிக்கலாம்!!



e-learn




தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை சார்பில் இணையவழிக்கல்வி பயிலுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது பாடங்களை படிக்கலாம்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் மாணவர்களின் கற்றல் திறனில் தொய்வு ஏற்படாமல் இருக்க, தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழிக் கற்றலை நடத்தி வருகிறது. இதே போல் தேசிய அளவில் சிபிஎஸ்இ, கேவிஎஸ் பள்ளிகளும், பல்கலைக்கழக கல்லூரிகளும் இணையவழிக் கல்வியை ஊக்கப்படுத்துகின்றன.

அந்த வகையில், தமிழகத்தில் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் இணையவழிக்கல்வி மூலம் கற்றலை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக www.elearning.tnschools.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால், அந்த இணையதளம் திறக்கப்படவில்லை. 

அதே நேரத்தில்www.e-learn.tnschools.gov.in என்ற இணையதளம் இயங்கி வருகிறது. அதில் வகுப்புகள் வாரியாக, தமிழ் மற்றும் ஆங்கில வழி மாணவர்களுக்கு தனித்தனியாக வீடியோ பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்க்கடல் என்ற கல்வித்தொலைக்காட்சி யூடியூப் சேனலும் இணைப்பு உள்ளது.

இது தவிர நீட் நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி வீடியோவும் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா விடுமுறையில் மாணவர்கள் இந்த ஆன்லைன் மூலமாக, வீட்டிலிருந்தபடியே படிக்கலாம். ஆசிரியர்கள், பெற்றோர்கள், தங்களுடைய மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து இணையவழிக்கல்வி கற்றலை ஊக்கப்படுத்தும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


நன்றி 
இப்படிக்கு 

உங்கள் செந்தில் 

No comments:

Post a Comment

TN MRB Latest Recruitment 2020

TN MRB LATEST RECRUITMENT 2020 தமிழக அரசு சுகாதார துறையில் அதாவது மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் வேலைவாய்ப்பு ...