தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை..!
தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
Kindly subscribe our Tamil Medium Pasanga YouTube Channel
மாணவர்களுக்கு ரூ.2000 ஊக்கத்தொகை. தமிழக அரசு அறிவிப்பு. தமிழகத்தில் கொரோனா அச்சத்தின் காரணமாக 12ஆம் வகுப்பு மாணவர்கள் கிட்டத்தட்ட 32 இலட்சம் பேர் பொதுத்தேர்வின் கடைசி பரிட்சை எழுதவில்லை. அதனால் அவர்களுக்கு தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையின் அறிவித்தார்.
இந்த நிலையில் தமிழக அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் 2019 - 2020 ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.2000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்காக ஊக்கத்தொகை வழங்க அரசு ரூ.107.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் உடனடியாக EMIS தளத்தில் தங்களுடைய வங்கி கணக்கை பதிவேற்றம் செய்ய வேண்டுமென பள்ளி கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

No comments:
Post a Comment